வெற்றி எப்பொழுது கிடைக்கும்? 
- நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் உயர்வானதாக இருக்க வேண்டும்.

- விடாமுயற்சி இருக்க வேண்டும்.

- கடின உழைப்பு இருக்க வேண்டும்.

இவைகள்எல்லாம் இருந்துவிட்டால் வெற்றிகிடைத்துவிடுமா? இத்துடன் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய திறனும் நம்மிடம் இருந்தால், கூடியவிரைவில் நாம்வெற்றியை நெருங்கிவிடலாம். 
⇒ தாகத்துடன் இருந்தகாகாவித்தியாசமாக யோசித்து பக்கத்தில் இருந்தகற்களைப் பானையில் போட்டுதண்ணீர் குடித்ததாகட்டும்…
⇒ ‘உலகத்தை முதலில் சுற்றி வருபவர்களுக்குத்தான் பழம்’ என்றுசிவன்சொல்லியபோது, சிறிதுவித்தியாசமாக யோசித்து அப்பா, அம்மாவை சுற்றிவந்துபழத்தைக் கைப்பற்றிய பிள்ளையாராகட்டும்..
எப்பொழுதுமே இந்தஉலகத்தில் வித்தியாசமாக சிந்திப்பவர்களால் தான்பெரிதாக வெற்றியடைய முடியும். இல்லையா?
ஒருநாட்டின் மன்னன்,
பல்வேறு தலைவர்கள்,
இந்தியாவின் பெரும்தொழிலதிபர்கள்,
போன்றவெற்றியாளர்கள்
தங்கள்வாழ்வில் எப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்தித்தார்கள்
என்றகதைகளின் மூலமாக உங்களையும் வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டுவது தான் இந்த
(இந்த வலைப்பதிவில் வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு
பதிவுகள் வெளியிடப்படும். Stay Tune ❤ )
===============================================================
திருபாய் அம்பானி அவர்களின் மாற்று சிந்தனை
________________________________________________________________________
திரு. திருபாய் அம்பானி அவர்கள் சிறுவயதில் ஏமன்நாட்டில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார். அந்தநாட்டில் ஒருபெட்ரோல் பல்க்-கில் வெறும் 300 ரூபாய்சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய கடினஉழைப்பு மூலமாக1200 ரூபாய்சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருந்தார்.
இருந்தபோதும், வெளிநாட்டில் வேலைப்பார்க்க கூடியஎல்லோருக்கும் வரக்கூடிய ஆசைதான்திருபாய் அம்பானி அவர்களுக்கு வந்தது.
“எப்பொழுது நம்முடைய தாய் நாட்டிற்கு திரும்பலாம்? எப்பொழுது நம்முடைய சொந்த தொழிலை நம்முடைய தாய்நாட்டில் தொடங்கப் போகிறோம்?” என்றகேள்விதான்.
திருபாய் அம்பானி அவர்களும் ஒருகுறிப்பிட்ட தொகைசேர்த்த பிறகுதாய்நாட்டிற்கு திரும்பிவிடலாம் என்றுசிறிதுசிறிதாக பணத்தைசேமிக்கிறார். எப்படியெல்லாம் அதிகமாக சேமிக்கலாம் என்றுஅவர்யோசிக்கும் பொழுதுதான், ஒருவித்தியாசமான சிந்தனை அவருக்குள் தோன்றியது. அந்தயோசனைரொம்பவே வித்தியாசமானது. ஆனால், அவர்யாரையும் ஏமாற்றவில்லை. ஏமன்நாட்டில் இருந்தஒருசிறியஓட்டையை அவர்தனக்குசாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான்சொல்லவேண்டும்.
ஏமன்நாட்டில் அப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருந்த பணத்தின் பெயர் ரியால்.
ரியால்கரன்சியில் சில்லைரைக் காசுகள், முழுவெள்ளியினால் செய்யப்பட்டிருக்கும். (அந்தக்காலக்கட்டத்தில்) அந்தவெள்ளிக் காசுகளில், ’எவ்வளவு கிராம்வெள்ளிஇருக்கிறது? என்றுகணக்குசெய்துபார்க்க வேண்டும்.’ என்றுயாருக்கும் தோன்றவில்லை. ஆனால், கணக்குசெய்துபார்க்க வேண்டும் என்றுநம்முடைய திருபாய் அம்பானி சாருக்குத் தோன்றியது.
கணக்குசெய்துப் பார்த்தால் அந்தநாணயத்தில் இருக்கும் வெள்ளியின் மதிப்பு, அந்தநாணயத்தின் மதிப்பைவிட அதிகமாக இருந்திருக்கிறது.
அந்தநாணயத்தில் இருக்கும் வெள்ளியை உருக்கி வெள்ளித் தரகரிடம் விற்றால், அந்தவெள்ளித் தரகர்கொடுக்கும் விலைஅந்தநாணயத்தின் விலையைவிட பலமடங்கு அதிகமாக இருந்தது.
(ஏமன் அரசாங்கம் தவறாககணக்குசெய்துநாணயம்அச்சடித்தார்களா..? இல்லையென்றால் ஏமன்அரசாங்கம் நாணயத்தை அச்சிட்டப்பிறகு வெள்ளியின் விலைபலமடங்கு அதிகரித்துவிட்டதா..? என்றுகேட்டால் எனக்குத் தெரியாதுங்க)
For Example, இப்பொழுது திருபாய் அம்பானி சார் கையில் இருக்கும் நாணயத்தின் மதிப்பு ’10 ரியால்’ என்றால், அந்தநாணயத்தை உருக்கி அதன்வெள்ளியை, வெள்ளித் தரகரிடம் விற்கும் பொழுதுஅவருக்கு கிடைத்த பணத்தின் மதிப்பு 30 ரியாலுக்கு மேல்அவருக்கு கிடைத்தது. 
முதலில் தன்கையில்இருக்கும் வெள்ளிநாணயங்களை உருக்கி, விற்றுஇலாபம்பார்த்தார் திருபாய் அம்பானி. அதன்பிறகு தன்னுடைய நண்பர்கள், தன்னோடு பெட்ரோல் பல்க்கில் வேலைப்பார்ப்பவர்கள் அனைவரிடமும் ரூபாய்நோட்டுக்களைக் கொடுத்து, சில்லரைக் காசுகளாக மாற்றிஅதனைவிற்றும் நல்லஇலாபம்பார்த்தார். (அந்தசமயத்தில் யாருக்கும் அவரதுபணம்சம்பாதிக்கும் இந்தவித்தைதெரியாது)
ஆனால், திருபாய் அம்பானி அவர்களின் நாணயத்தை உருக்கி விற்கும் தொழில்ரொம்பநாள்நீடிக்கவில்லை. ஏமன்அரசாங்கமே, தன்னுடைய நாணயங்களில் இருந்ததவறைகண்டுபிடித்து அவர்களுடைய வெள்ளிநாணயங்களை திரும்ப எடுத்துக்கொண்டார்கள். (அதுதான் Demonetization).
அதற்குள் திருபாய் அம்பானி சார்நிறையபணம்சம்பாதித்துவிட்டார். என்னதான் இதுதிருபாய் அம்பானி அவர்களின் வித்தியாசமான சிந்தனை என்றுசொன்னாலும், இதுசட்டத்திற்கு புறம்பான செயல்தான். நான்இல்லைஎன்றுசொல்லவில்லை. திருபாய் அம்பானி அவர்கள் இந்தவித்தையை மூன்றுமாதங்கள் கழித்து கண்டுபிடித்திருந்தால், அவரால்சம்பாதித்திருக்க முடியாது.
என்னதான் சட்டத்திற்கு எதிரானசெயலாகஇருந்தாலும், நாம்அவரிடமிருந்து மாற்றியோசிக்கும் கலையையும், கண்டுபிடித்த உடனேதாமதிக்காமல் உடனேசெயல்படுத்திய அந்ததிறமையையும் மட்டும் கற்றுக் கொள்வோமாக. ..
கொஞ்சம் மாற்றியோசிக்கக்கூடிய திறன்.. ஒருவிஷயத்தை தள்ளிப் போடாமல் உடனேசெய்யக்கூடிய செயல்திறன்..
இந்தஇரண்டும் உங்களிடம் இருந்தால், நீங்கள்தான்அடுத்தஅம்பானி.. 
.
கேட்கவே நல்லாஇருக்குல... நடக்கும் போதுஇன்னும் நல்லாயிருக்கும்..
All the best...


Good story
ReplyDelete