Friday, July 17, 2020

Montgomery Ward & Co

    ன்றைய காலக்கட்டத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் நாம் வீட்டிலிருந்தே பொருட்கள் ஆர்டர் செய்கிறோம். அந்த நிறுவனங்களும் நம்முடைய வீட்டிற்கே பொருட்களை டெலிவரி (Delivery) செய்துவிடுகிறார்கள். இந்த நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடி யார் என்று தெரியுமா?

ஆரோன் மான்கொமரி வார்ட்



மான்கொமரி 1844 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் பிறந்தவர். நடுத்தர குடும்பம் தான். 14 வயதுவரை தன்னுடைய பள்ளிப்படிப்பை மேற்கொண்டார். 

  • அதன்பிறகு ’மரப்பீப்பாய்’ தயாரிக்கக் கூடிய ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சென்றார். 
  • பிறகு ஒரு செங்கல் சூலையில் செங்கல் அடுக்கி வைக்கும் வேலைக்கு சென்றார். இந்த வேலையும் அவருக்குப் பிடிக்கவில்லை. 
  • அடுத்து ஷூ விற்பனை செய்யக்கூடிய ஒரு கடையில் விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தார். ஊர் ஊராக செல்வது, அங்கு இருக்கக்கூடிய ஷூ வியாபாரிகளை சந்தித்து ஆர்டர் பிடிப்பது என்று இந்த வேலை சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த வேலையிலும் வருமானம் குறைவு தான்.
”அடுத்து எப்படி முன்னேறலாம்? என்ன வேலைக்குப் போகலாம்?” என்று ஒவ்வொரு நொடியும் யோசித்துக் கொண்டே இருந்தார். அதனால், அவர் சிக்காகோ நகருக்கு 1865-ஆம் ஆண்டு வேலை தேடி சென்றார். 

அந்த காலத்தில் குளிர்சாதனபெட்டி போன்ற பொருட்கள் எல்லாம் கிடையாது. அதனால் காய்கறி, பழம் எல்லாவற்றையும் உலர வைத்து விற்பது என்பது, அந்த காலத்தில் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது. அதனால், அது போன்ற ஒரு பழத்தோட்டத்தில் விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தார். அவருடைய வேலை என்னவென்றால், சிக்காகோ நகருக்கு அருகில் இருக்கக்கூடிய கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் ஆர்டர் பிடித்து அவர்களிடம் விற்பனை செய்வது..

அப்பொழுது தான் அவர் அந்த கிராமத்தில் உள்ள சில்லறை கடைகளில் விற்கக்கூடிய பொருட்களின் விலை நிலவரங்களைப் பார்த்தார். ஒவ்வொரு கிராமத்திலும் பல பொருட்களின் விலை நகர்த்தில் விற்கக்கூடிய பொருட்களின் விலையை விட பலமடங்கு அதிகமாக இருந்தது.

அந்த காலத்தில் எந்த பொருளுக்குமே MRP விலை என்ற நிர்ணய விலையெல்லாம் கிடையாது. கடைக்காரர் சொல்வது தான் விலை. 

உதாரணத்திற்கு நகரத்தில் ஒரு பொருளின் விலை 20 டாலர் என்றால், அதே பொருள் கிராமத்தில் இருமடங்கு அதிகமாக 40 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. 'தயாரிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் பல இடைத்தரகர்களிடம் கைமாறி வருவதால் தான், இந்த விலையேற்றம்' என்ற உண்மையைப் புரிந்துகொண்டார் மான்கொமரி. 

இந்த இடத்தில் தான் சிறிது வித்தியாசமாக சிந்தித்தார் மான்கொமரி.

’இவ்வளவு இடைத்தரகர்களிடம் கை மாறுவதால் தானே இவ்வளவு விலையேற்றம்..? தயாரிப்பு பொருட்களை கிராமத்து வாடிக்கையாளர்களிடம் நேரடியாக கொண்டு போய் சேர்த்தால் இந்த விலையேற்றத்தை குறைக்க முடியுமே..’ என்று வித்தியாசமாக யோசித்தார் மான்கொமரி. இதனால் மக்களுக்கும் நியாயமான விலையில் பல பொருட்கள் கிடைக்கும் 

இது போன்ற வித்தியாசமான சிந்தனை எல்லாம் பல பேருக்குத் தோன்றலாம். ஆனால், அது தோன்றிய உடனே செயல்படுத்துபவர்கள் மட்டும் தான் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். 

அந்த ஐடியா தோன்றியவுடனே, வெறும் ஐடியாவாக மட்டும் இல்லாமல் அதனை உடனே செயல்படுத்துவதற்காக களத்திலும் இறங்கினார் மான்கொமரி. 

”மான்கொமரி வார்ட் அண்ட் கம்பெனி” என்று தன்னுடைய பெயரிலேயே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் தனக்கு தெரிந்த தொழிலான பழ விற்பனையிலேயே இறங்கினார். அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைப்பட்டியலை அவரே தயார் செய்தார். நகரத்தில் பழத்தின் விலை எவ்வளவோ அதையே அந்த விலைப் பட்டியலில் இணைத்தார்.

தயார் செய்த அந்த பட்டியலை அனைத்து கிராம மக்களுக்கும் அவர் கொடுத்தார். 

மக்கள் பழங்கள், காய்கறிகள் வேண்டும் என்று மணியார்டர் போட்டார்கள் என்றால், அவர் அந்த ஊரில் உள்ள இரயில் நிலையத்திற்கு அனுப்பி விடுவார். மக்கள் அதன்மூலம் பொருட்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

இது போன்ற வித்தியாசமான சிந்தனையால் உலகின் முதல் மெயில் ஆர்டர் தொழிலைத் தொடங்கினார் மான்கொமரி. இதன்மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் பழங்கள், காய்கறிகள் கிடைக்க ஆரம்பித்தது. இது கொஞ்சம் புதுமையான தொழில் என்பதால் மக்களிடம் சிறிது சிறிதாக தான் பரவ ஆரம்பித்தது. 

தொழில் சிறிது சிறிதாக வளர்ந்து, சூடுபிடிக்க ஆரம்பித்த காலத்தில் தான் ஒரு மிகப்பெரிய பேரதிர்ச்சியான சம்பவம் நடந்தது.

மான்கொமரி அவர்களின் சரக்குக்கிடங்கில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து நடந்தது. அவர் வாங்கி வைத்திருந்த அத்தனைப் பொருட்களும் அவர் கண் முன்னாலேயே எரிந்து சாம்பலானது. மிகப்பெரிய நஷ்டம். ’அவ்வளவு தான். இந்த தொழில் முடிந்துவிட்டது’ என்று நினைத்தார்கள். 

ஆனால், அந்த தோல்விக்குப் பிறகு தான் இன்னும் வேகமாக வெறித்தனமாக செயல்படத் தொடங்கினார் மான்கொமரி. பழங்களோடு சேர்த்து கிராம மக்கள் ’என்னென்ன பொருட்கள் எல்லாம் விரும்புவார்கள்? அவர்களுக்கு என்னென்ன தேவையான பொருட்கள்?’ என்று யோசித்து 163 பொருட்கள் கொண்ட ஒரு பட்டியலை அவரே தயார் செய்தார். உலகின் முதல் கேட்டலாக் (Catalog) 1862-ஆம் ஆண்டு தயாரானது. கேட்டலாக்கைப் பார்த்துவிட்டு மெயில் ஆர்டர் செய்தால் போஸ்ட் மூலமாக பொருள் வீட்டிற்கே வந்துவிடும்.


கிட்டத்தட்ட அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தொழிலை 18-ஆம் நூற்றாண்டிலேயே கொண்டு வந்துவிட்டார் மான்கொமரி. குறைவான விலையிலேயே இவ்வளவு பொருட்கள் என்பதால் வியாபாரம் வளர ஆரம்பித்தது. 

மான்கொமரியின் இந்த வளர்ச்சியைப் பார்த்து உள்ளூர் கிராம வியாபாரிகள் மிரண்டுப் போனார்கள். வியாபாரிகள் மான்கொமரியின் இந்த கேட்டலாக் தங்களுடைய ஊருக்கு வந்ததும் அதைக் கிழித்துப் போட்டார்கள். அந்த கேட்டலாக்கை எரித்துப் பார்த்தார்கள். ஆனால், இதுபோன்ற சதிதிட்டங்கள் நடந்தாலும்கூட பொருட்களின் விலை மிகவும் குறைவு என்பதால், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. வியாபாரம் படுவேகமாக வளர ஆரம்பித்தது. 

அடுத்த சில வருடங்களிலேயே சில பக்கங்கள் 163 பொருட்கள் என்று இருந்த அந்த கேட்டலாக், பல நூறு பக்கங்கள் 20,000 பொருட்கள் 30 இலட்சம் பிரதிகள் என்று அச்சிடப்பட்டு பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்தது மான்கொமரி அண்ட் கம்பெனி. 




இவரைப் பார்த்து அமெரிக்காவில் உள்ள Chears, Roberts போன்ற பெரிய நிறுவனங்களும் கேட்லாக் வழி மெயில் ஆர்டர் தொழிலில் இறங்கினார்கள். 

ஆனால், எவ்வளவு போட்டி வந்தாலும் 1913 ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட தன்னுடைய 89 வயது வரை, சாகும் வரைக்கும் இந்த மெயில் ஆர்டர் தொழிலில் உச்சத்தில் இருந்தது மான்கொமரி அண்ட் கம்பெனி தான். 

பார்த்தீர்களா..?

"இந்த கிராம மக்கள் இவ்வளவு விலை கொடுத்து ஏன் பொருள் வாங்க வேண்டும்? இதை எப்படி மாற்றுவது?" என்று யோசித்த ஒரு சின்ன வித்தியாசமான சிந்தனை தான் இவ்வளவு பெரிய நிறுவனம் வளரக் காரணம். 

நீங்களும் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் ஒரே மாதிரி சிந்திக்காமல், கொஞ்சம் வித்தியாசமாக சிந்தியுங்கள். உங்கள் சுயநலத்தில் சிறிது பொதுநலமும் கலந்து இருந்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

All the Best

0 comments:

Post a Comment