ஜப்பானில் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் இருக்கக்கூடிய உயர் அதிகாரிகள் சிலர் அன்று மிகவும் கவலையாக ஒரு சந்திப்பு அறையில் உட்கார்ந்திருந்தார்கள். அது என்னவென்றால் அவர்கள் சோப்பு டெலிவரி செய்த எல்லா வியாபாரிகளிடம் இருந்து ஒரே ஒரு குற்றச்சாட்டு அடிக்கடி வருகிறது என்பது தான்..
அது என்ன குற்றச்சாட்டு என்றால், அந்த சோப்பு கம்பெனி, சோப்பு பெட்டியில் இல்லாமல் சோப்பு கவரில் தான் சோப்பு டெலிவரி செய்வார்களாம். ஆனால், சில சோப்பு கவர்களில் வெறும் கவர் மட்டும் தான் இருக்கிறது. உள்ளே திறந்துப் பார்த்தால் உள்ளே சோப்பு இருப்பதில்லை. அதுவும் அன்றைய தினம் ’சோப்புக் காணவில்லை’ என்ற குற்றச்சாட்டு அனைத்து வியாபாரிகளிடம் இருந்தும் வந்திருந்தது.
அந்த சோப்பு தொழிற்சாலை முழுவதுமாக தானியங்கி முறையில் (Fully Automated) இயங்கக்கூடியது. சோப்புத் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை மட்டும் உள்ளே அனுப்பினால் போதும். அனைத்து மூலப்பொருட்களும் சரியான விகிதத்தில் கலந்து சோப்பாக மாறி காய வைக்கப்பட்டு வரிசையாக வந்துவிடும். அப்படி வரிசையாக வரும்பொழுது இன்னொரு வரிசையில் சோப்பு கவர் வரும். அந்த அட்டை மேல் சோப்பு வைக்கப்படும். சோப்பு வைக்கப்பட்டதும் அந்த அட்டை மூன்று பக்கமும் அழகாக பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்ய வேண்டிய பெட்டியில் வந்து விழுந்துவிடும்.
இந்த இடத்தில் தான் தவறு நடக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டார்கள். அது என்னவென்றால், சில நேரங்களில் சோப்பு, சோப்பு கவர்களில் வைப்பதற்கு முன்பே அது பேக் செய்யப்பட்டு காலி சோப்பு கவராக டெலிவரி செய்யப்படும் இடத்திற்கு சென்றுவிடுகிறது என்பது தான்.
![]() |
| Fully Automated Soap Manufacturing Company |
தொழிற்சாலையை இவ்வளவு தூரம் தானியங்கி முறையில் தன்னிச்சையாக சோப்பு தயாரிக்க வைத்தாலும், இந்த சிறிய பிரச்சனையை மட்டும் அவர்களால் தீர்க்கவே முடியவில்லை. இந்த குற்றச்சாட்டு மட்டும் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்கதான் அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Senior Production Manager நடுவில் அமர்ந்திருக்க மற்ற ஒவ்வொரு மேலாளர்களும் ஒவ்வொரு விதமான யோசனை சொல்கிறார்கள்.
ஒரு மேலாளர், “கவரில் சோப்பு பேக் செய்யப்படுகிறதா என்று பார்ப்பதற்கு மட்டும் நாம் தனியாக ஒரு ஆளை வேலைக்கு நியமிக்கலாம்” என்றார்.
இன்னொரு மேலாளர், “ஒரு Employee-ஐ வேலைக்கு சேர்த்தால், நாம் மாதாமாதம் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக One Time Investment செய்யலாம். அதாவது ஒரு இலட்சம் டாலர் பணம் கொடுத்து ஒரு ரோபோட் வாங்கிவிடலாம். அது சரியாக இருக்கிறதா என்று பார்க்கும்” என்று சொல்கிறார்.
இப்படி ஒவ்வொருவரும் பல இலட்சம் ரூபாய் செலவு செய்வது போல் பல ஐடியாக்களைக் கொடுத்தனர்.
அந்த சமயம் அந்த நிறுவனத்தின் காபி கொண்டு செல்வதற்கான வேலையாள் ஒருவன் அந்த அறைக்கு உள்ளே வந்து அனைவருக்கும் காபி கொடுத்தான்.
“இங்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியும். நான் வேண்டுமென்றால் ஒரு தீர்வு சொல்லட்டுமா?” என்று பணிவாக கேட்கிறான் அந்த வேலையாள்.
உடனே அங்கிருந்த ஒரு மேனேஜர், ”நீயே ஒரு காபி கொடுக்கக்கூடிய தொழிலாளி. உனக்கு என்ன தெரியும்? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். போ” என்று சொல்கிறார்.
அங்கிருந்த Senior Production Manager, "எப்பொழுதுமே எந்தவொரு விஷயத்தையும் யார் சொல்றாங்க? அவன் தகுதி என்ன? அவன் இதை பின்பற்றுகிறானா? என்றெல்லாம் பார்க்காதீங்க.. அந்த விஷயத்தை நாம் பின்பற்றினால் நமக்கு இலாபமா? நஷ்டமா? என்று மட்டும் யோசியுங்கள்” என்று சொன்னார்.
அந்த மேலாளர் கொடுத்த தைரியத்தில் அந்த வேலையாளும் தன்னுடைய வித்தியாசமான யோசனையை வெளிப்படுத்தினார்.
அது என்னவென்றால், “சோப்பு கவரில் வைத்து வரும் அந்த இடத்தின் அருகில் ஒரு High Speed Table Fan வைத்துவிடலாம்” என்பதுதான்.
கவரில் சோப்பு இருந்தது என்றால் அது அடுத்த பகுதிக்கு சென்றுவிடும். ஒருவேளை சோப்பு இல்லாமல் காலி கவராக இருந்தது என்றால், Table Fan-ல் அடிக்கிற காற்றுக்கு காலி கவர் தானாகவே வெளியே வந்து விழுந்துவிடும்.
பல இலடசம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில், வெறும் ஆயிரம் ரூபாய் Table Fan-ல் சுலபமாக தீர்த்துவிட்டார்.
பார்த்தீர்களா?
இது தான் மாத்தி யோசிக்கும் திறன். பிரச்சனை எவ்வளவு பெரிதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், அதற்கான தீர்வு எப்பொழுதுமே மிகவும் சிறியதாக தான் இருக்கும். தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. நீங்களும் சிறிது வித்தியாசமாக சிந்தியுங்கள்.
All the best.



0 comments:
Post a Comment