பாபருக்கும், அக்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஹூமாயூன் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் தான் ஷெர்ஷா. பாபர் காலத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் பீகார் பகுதிக்கு மட்டும் தளபதியாக இருந்த ஷெர்ஷா, சிறிது சிறிதாக தன்னுடைய போர் தந்திரத்தாலும், புத்தி சாதூர்யத்தாலும் அதிகமான இடங்களை கைப்பற்றிக் கொண்டே இருந்தார்.
![]() |
| Sher Shah Suri - The Lion King |
ஷெர்ஷாவின் போர் தந்திரங்களிலேயே முக்கியமானது ’ஆள்குழி’ போர் முறை தான். உலகத்திலேயே ஆள்குழி போர் முறையை அதிகமாகப் பயன்படுத்தியதும் ஷெர்ஷா தான்.
குழிகளைத் தோண்டி அந்த குழிகளில் பதுங்கி இருந்து தாக்குவது தான் ஆள்குழி போர் முறை எனப்படும்.
மேலும் அந்த குழிகளைத் தோண்டிய மண் மூலமாகவே கரை அமைத்து தன் வீரர்களுக்கு அடிபடாத வண்ணம் எதிரிகளைத் தாக்கினார். இந்த போர் முறையில் தான் அவர் அதிகமான பகுதிகளைக் கைப்பற்றினார்.
ஆனால், இராஜஸ்தான் பாலைவனத்தில் அவருடைய இந்த யுக்தி பலிக்கவில்லை. காரணம் அங்கு இருக்கக்கூடிய காய்ந்த மண்ணால், அவரால் குழியும் தோண்ட முடியவில்லை. கரையும் அமைக்க முடியவில்லை.
இதனால், ஷெர்ஷா ஒன்றும் சோர்ந்துப் போகவில்லை. யோசித்தார்.. வேறு எப்படி எதிரிகளைத் தாக்கலாம் என்று ஒவ்வொரு விநாடியும் யோசித்துக் கொண்டே இருந்தார்.
சிறிது வித்தியாசமாக யோசித்து ஒரு புது யுக்தியைக் கண்டுபிடித்துவிட்டார். அது என்னவென்றால், மிகப்பெரிய கோணிப்பைகளில் அந்த பாலைவன மணலை நிரப்பி அதனை அரண் மாதிரி முன்னால் வைத்துக் கொண்டு, அந்த கோணிப்பையின் பின்னால் இருந்து எதிரிகளைத் தாக்கலாம் என்பது தான். இந்த யுக்தியின் மூலமாக இந்த போரிலும் அவருக்கு வெற்றி தான்.
எப்படி குழித் தோண்ட முடியாமல் பாலைவன மணல் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்ததோ, அந்த மணல் மூலமாகவே அவர் தீர்வுக் கண்டுவிட்டார்.. இது தான் மாத்தி யோசிக்கும் திறன்.
![]() |
| Intelligence |
தன்னுடைய பல போர் முறைகளாலும், ராஜ தந்திரங்களாலும் டெல்லியையே கைப்பற்றி மொத்த இந்துஸ்தானத்துக்கும் ஐந்து வருடங்கள் ராஜாவாக இருந்தார் ஷெர்ஷா...
5 வருடங்கள் தான் இராஜாவாக இருந்தாலும்கூட, ’முதல்வன் படத்தில் ஒருநாள் முதலமைச்சர் ஆன அர்ஜூன்.., எப்படி அந்த ஒரு நாளிலேயே அவ்வளவு நல்லது செய்வாரோ’. அதுபோல் பல மன்னர்கள்கூட செய்யாத புதுமையான வித்தியாசமான செயல்களை அவர் தன்னுடைய ஆட்சியிலும், நிர்வாகத்திலும் செய்திருக்கிறார்.
நீங்கள் அதனையெல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால், பல புத்தகங்களில் இருந்து குறிப்பெடுத்து மதன் அவர்கள் எழுதிய ”வந்தார்கள். வென்றார்கள்” புத்தகத்தையும், முகில் அவர்கள் எழுதிய “முகலாயர்கள்” புத்தகத்தையும் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்வும் பல வித்தியாசமான சிந்தனைகளால் மேம்படட்டும்..
All the best..




0 comments:
Post a Comment