Friday, July 3, 2020

Jeff Bezos - Amazon Founder

    ன்றைய தேதியில் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்றால் அது அமேசான் (Amazon) நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் அவர்கள் தான். கிட்டத்தட்ட 113 பில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் 8 இலட்சம் கோடி ரூபாய். அவர் மாத்தி யோசித்து வெற்றி பெற்ற சம்பவத்தை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.



இன்றைய தேதியில் அமேசானில் கிடைக்காத பொருட்கள் என்று எதுவுமே இல்லை. A - Z எல்லா பொருட்களுமே அமேசானில் கிடைக்கிறது. அமேசானின் லோகோவும் அதை தான் சொல்கிறது. (A to Z)

ஆனால், ஆரம்பக் காலக்கட்டத்தில் 1994 ஆம் ஆண்டு அமேசானில் புத்தகங்கள் மட்டும் தான் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வெறும் புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடிய இடம் தான் அமேசான்.காம் (amazon.com)

அதுவும் எப்படி தெரியுமா? 

ஒரு வாடிக்கையாளர் அமேசானில் புத்தகம் வேண்டும் என்று கேட்டால், அமேசான் அந்த புத்தக பதிப்பகத்தைத் தொடர்புக் கொள்வார்கள். உடனே, அந்த பதிப்பாளர் அமேசான் நிறுவனத்திற்கு புத்தகத்தை அனுப்பி விடுவார்கள். அதன்பிறகு அமேசான் அந்த புத்தகத்தை வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் காலம் கூட ஆகலாம். 

ஆனால், இன்று 24 மணி நேரத்திற்குள் பொருட்களை அமேசான் Delivery செய்து விடுகிறார்கள். அதுவும் Amazon Prime Members ஆக இருந்தால், 5 முதல் 6 மணி நேரத்தில் கூட பொருட்களை Delivery செய்து விடுகிறார்கள். ஆனால், ஆரம்பக்காலத்தில் ஒரு வார காலம் எடுத்துக் கொண்டார்கள். 



ஒரு சமயத்தில் அமேசான் நிறுவனத்திற்கு அதிகமாக புத்தக ஆர்டர்கள் வரத் தொடங்கின. அமேசான் சிறிது சிறிதாக வளரத் தொடங்கிய அந்த நேரத்தில் தான் நிறுவனம் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டது. அது என்ன பிரச்சனை என்றால், Minimum Order Problem. அதாவது ”Minimum 10 புத்தகங்களையாவது ஆர்டர் செய்தால் தான் நாங்கள் புத்தகங்களை உங்களுக்கு Delivery செய்வோம்” என்று புத்தக பதிப்பாளர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.

Minimum 10 புத்தகங்கள் ஆர்டர் செய்யனுமா? என்னடா இது சோதனை.. ஒரு வாடிக்கையாளருக்காக நாம் 10 புத்தகங்களை ஆர்டர் செய்யவும் முடியாது. அதே சமயம் ஒரு புத்தகம் தான் கேட்கிறார் என்பதற்காக அந்த வாடிக்கையாளரை விடவும் முடியாது. 

‘நிறுவனம் நன்றாக வளர்ந்து வரும் இந்த நேரத்தில் தான் இவ்வளவு பெரிய பிரச்சனையா?’ என்று அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸ் துவண்டு போகவில்லை. இந்த இடத்தில்தான் ஜெஃப் பேசோஸ் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கினார். 

அது என்னவென்றால், 10 புத்தகங்களாவது ஆர்டர் செய்ய வேண்டும் என்று பதிப்பாளர்கள் நிபந்தனை விதித்தார்கள் அல்லவா.. அந்த புத்தக பதிப்பகத்திடம் எங்குமே கிடைக்காத அரிதான 9 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த 9 புத்தகத்தொடு சேர்த்து வாடிக்கையாளர் கேட்ட 1 புத்தகத்தையும் ஆர்டர் செய்தார் ஜெஃப் பெசோஸ்.  

அந்த புத்தக பதிப்பாளரும் “நீங்கள் கேட்ட பத்து புத்தகத்தில் 9 புத்தகம் தற்போது Stock இல்லை.  இந்த ஒரு புத்தகம் மட்டும் தான் எங்களிடம் Available ஆக இருக்கிறது. We are very sorry" என்று சொல்லிவிட்டு அந்த ஒரு புத்தகத்தை மட்டும் அமேசான் நிறுவனத்திற்கு Delivery செய்துவிட்டார்கள். அந்த ஒரு புத்தகத்தை அமேசான் வாடிக்கையாளருக்கு Delivery செய்து விடுவார்கள். பிரச்சனை தீர்ந்தது.

பார்த்தீர்களா..?

எந்தவொரு பிரச்சனைக்கும் இது போன்று கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தால் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் இதுபோன்று பல பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். அந்த பிரச்சனையை எப்படி Solve செய்வது என்று வித்தியாசமாக சிந்தியுங்கள். நிச்சயமாக நீங்களும் ஜெஃப் பேசோஸ் அளவுக்கு வெற்றி அடைவீர்கள்.

All the best.

Amazon Logo History
Amazon Logo History


 

0 comments:

Post a Comment