Friday, July 24, 2020

K.S.Ravikumar - Linga Shooting

    யக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது.. ”தயாரிப்பாளரின் இயக்குநர்”. தயாரிப்பாளருக்கு ஒரு ரூபாய் கூட தேவையில்லாமல் செலவாகக்கூடாது என்று நினைக்கக் கூடியவர். அதனால் தான் அவருக்கு இந்த பெயர்.


அவர் ரஜினியுடன் 'லிங்கா' திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நேரம். லிங்கா படத்தின் கதை நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தது தான். 

நடிகர் ரஜினி அந்த படத்தில், கிராம மக்களுக்காக அணைக் கட்டுவது தான் படத்தின் மையமே. அணைக் கட்டுவது போன்று செட் அமைத்து படம் எடுக்க வேண்டும். 

அதனால், ”அணைக் கட்டுவது போன்று செட் அமைக்க எவ்வளவு நாள் ஆகும்?” என்று படக் குழுவினரிடம் கேட்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். 

”அணை போன்று செட் எளிமையாக போட்டுவிடலாம் சார். ஆனால், பிரச்சனை என்னவென்றால் ‘முதலில் ஒரு வெற்று இடத்தைக் காட்டி ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டும். பிறகு கட்டப்போவது போன்ற காட்சி அமைப்புகள். அதன் பிறகு, பாதி அணை கட்டிக் கொண்டிருப்பது ஒரு போன்ற காட்சியமைப்பு’. இவ்வாறு அணையைப் பாதி பாதி காட்டி தான் காட்சிகள் அமைக்க வேண்டும். இவ்வாறு பாதி பாதியாக படம் எடுப்பதால் நமக்கு தோராயமாக அந்த காட்சி அமைப்புகள் எடுக்க 90 நாட்கள் தேவைப்படும்.” என்றனர் படக் குழுவினர்.

”இவ்வளவு நாளாகுமா?” என்று கேட்டார் கே.எஸ்.ரவிக்குமார். “அவ்வளவு நாள் இதையே படமாக எடுத்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் முதலில் அணையைக் கட்டி முடித்துவிடுங்கள் (செட் அமைப்பு). அதற்குள் படத்தின் மற்ற காட்சிகளை நான் படமாக்கி விடுகிறேன். அணையை முழுமையாக கட்டி முடித்தவுடன் அணைக்காட்சிகளை எடுத்துக் கொள்கிறேன்” என்று கே.எஸ்.ரவிக்குமார் சொன்னாராம். 

உடனே, அந்த படக்குழுவினர் “அது எப்படி சார். நாங்கள் அணையை முழுவதுமாக கட்டி முடித்துவிட்டால், கட்டப்போவது போன்ற காட்சிகள், பாதி கட்டிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் எல்லாம் எப்படி சார் எடுக்க முடியும்?” என்று குழம்பிப் போய் கேட்டார்களாம் படக்குழுவினர். 

இந்த இடத்தில் தான் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தினார். 

“அது ஒன்னும் இல்லப்பா.. நீங்கள் முதலில் அணையைக் கட்டி முடித்து விடுங்கள். அப்புறம் அந்த அணையை உடைத்து உடைத்து அணைக் கட்டுவது போன்ற காட்சிகளை பின்னாலிருந்து (From Reverse) எடுத்துக் கொள்கிறேன்” என்று சொன்னாராம். 

This is Reverse Thinking.. 

அந்த அணைக் கட்டக் கட்ட அந்த காட்சிகளை எடுத்திருந்தால் 90 நாட்கள் ஆகியிருக்கும். ஆனால், கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் மாத்தி யோசிக்கும் திறனால் 45 நாளிலேயே அந்த காட்சிகளை எடுத்துவிட்டார்.

ஒரு சின்ன மாத்தி யோசிக்கும் திறனால், எத்தனை பேரின் நேரம்... எவ்வளவு பேரின் உழைப்பு.. எவ்வளவு பணம் மிச்சமாகி இருக்கிறது என்று பார்த்தீர்களா?

நீங்களும் ஆட்டுமந்தைக் கூட்டம் போல் ஒரே மாதிரி யோசிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக யோசியுங்கள். உங்களாலும் உங்கள் வாழ்க்கையில் நிறைய நேரத்தையும் அதிகமான பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.



All the best

3 comments: