Friday, September 11, 2020

Living It and Working It

    Procter & Gamble என்று அழைக்கப்படுகிற P & G நிறுவனத்தின் வித்தியாசமான சிந்தனையை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

P & G நிறுவனம் என்றதும் உங்களுக்கு பரிட்சயமில்லாத ஒரு நிறுவனம் போல் தோன்றுகிறதா?. P & G நிறுவனத்தின் சில தயாரிப்புப் பொருட்களை நான் சொல்கிறேன். அதன்பிறகு இது உங்களுக்கு பரிட்சயமில்லாத நிறுவனமா? இல்லையா? என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

  • Ariel Washing Powder.
  • Gillete
  • Head & Shoulder Shampoos
  • Pantene Shampoo
  • Oral B Brushes
  • Pampers 
  • Whisper
  • Tide
  • Vicks
    இது போன்று பல எண்ணிலடங்கா பொருட்கள் P & G நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்கள் தான்.
 
 


1837-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் தான் இது. கிட்டத்தட்ட 180 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் 150 நாடுகளுக்கும் மேலாக மிகப் பெரிய அளவில் வியாபாரம் செய்யக்கூடிய நிறுவனம் தான் இந்த P & G நிறுவனம். 

இந்த Procter & Gamble நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக இன்று வளர்ந்திருந்தாலும், 21 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சிறிய சரிவை சந்தித்தது. அந்த சமயம் அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக இருந்த A.G.Lafley அவர்கள் தன்னுடைய வித்தியாசமான சிந்தனைகளாலும், பல புதுமைகளாலும் நிறுவனத்தை மீட்டு எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார் என்பது தான் இந்த பதிவு

நிறுவனத்தின் C.E.O வாக இருந்த A.G.Lafley அவர்கள் வித்தியாசமாக யோசித்து கொண்டு வந்த ஒரு புதுமையான திட்டம் தான் Living It

Living It


    Living It என்பது என்ன திட்டம் என்றால் P & G நிறுவனத்தில் வேலைப் பார்க்கக்கூடிய தொழிலாளர்கள் அனைவரும், முக்கிய வாடிக்கையாளர்களான நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்களுடன் அவர்கள் வீட்டிலேயே தங்கி அவர்களுக்கு என்ன மாதிரியான பொருட்களின் தேவை இருக்கிறது? எந்த மாதிரியான விலைப் பட்டியலில் இருக்கக்கூடிய பொருட்களை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்? எந்த அளவில் தேர்ந்தெடுக்கிறார்கள்? என்று P & G பணியாரகள் அவர்களுடனே இருந்துக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு புதுமையான திட்டம் தான் இந்த Living It.

இது ஒரு புறமிருக்க Working It என்று இன்னொரு புதுமையான திட்டத்தைக் கொண்டு வந்தார் A.G.Lafley. 

Working It


Working It என்பது என்ன திட்டமென்றால் நடுத்தர மக்கள் பொருட்கள் வாங்கக்கூடிய சிறு கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் எல்லாம்   P & G நிறுவனத்தின் பணியாளர்கள் வேலைப் பார்க்கக்கூடிய ஒரு புதுமையான திட்டம் தான் இந்த Working It. இந்த திட்டத்தின் மூலம் 
    அந்த கடை வியாபாரிகள் என்ன மாதிரியான பொருட்களை கொள்முதல் செய்கிறார்கள்? எவ்வளவு கொள்முதல் செய்கிறார்கள்? 
    என்ன மாதிரியான Packaging-ல் இருந்தால் மக்கள் அந்த பொருட்களை தேர்ந்தெடுக்கிறார்கள்? என்று கடையிலேயே இருந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான திட்டம் தான் இந்த Working It. 
 
 

Living It and Working It என்ற இந்த இரண்டு புதுமையான திட்டத்தால் வாடிக்கையாளர்கள் பற்றியும், வியாபாரிகள் பற்றியும் பல விஷயங்களை நேரடியாக P & G நிறுவனம் கற்றுக் கொண்டு பல புதுமையான பொருட்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் P & G நிறுவனத்தின் வியாபாரம் பல மடங்கு பெருகியது.  இது சாதாரண திட்டம் தானே என்று நமக்கு தோன்றினாலும் இதன் வெற்றி பிரம்மாண்டமாக இருந்தது.

ஏனென்றால், இந்த திட்டத்திற்கு முன்பு P & G நிறுவனத்தின் பொருட்கள் ஒரு வருடத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகக்கூடிய பொருட்களாக வெறும் 10 பொருட்கள் தான் இருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு பிறகு, 1 பில்லியன் டாலருக்கு மேல் விற்பனையாகக்கூடிய பொருட்களாக 23 பொருட்கள் மாறியது. இது தான் மாத்தி யோசிக்கும் திறனின் வெற்றி. மேலும் சொல்லப்போனால், வாடிக்கையாளர்கள் தான் கடவுள்.  வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்று தன்னுடைய வித்தியாசமான சிந்தனையால் புரிந்துக் கொண்டு பல புதுமையான பொருட்களை காலத்திற்கு ஏற்றார் போல் கொடுத்தது தான் 180 ஆண்டுகள் தாண்டியும் P & G நிறுவனம் நிலைத்து நிற்கக்காரணம். 

நீங்களும் இது போன்று ஒரு தொழிலை நடத்திக் கொண்டிருக்கலாம். அதனால், நீங்களும் உங்கள் வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்று தெளிவாக புரிந்துக் கொண்டு வியாபாரம் நடத்தினால் உங்கள் தொழிலும் பல தலைமுறைகள் தாண்டியும் நிலைத்து நிற்கும்..!
 
 

All the best..

0 comments:

Post a Comment